அவதூறு வழக்கு – விஜய் சேதுபதி கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை

கடந்த 2021-ஆம் ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இவர் மீதான அவதூறு வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் பொழுது நடிகரான மனுதாரர் தெரிவித்த கருத்துகள் பொது வெளியில் கவனத்தை பெறுகின்றது என்றும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் பொறுப்புள்ள நபராக யாரையும் அவதூறாக பேசக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி மார்ச் 2-ஆம் தேதி இரு தரப்பினரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools