ஆங்கிலப் படத்தை பாராட்டி வைரமுத்து கருத்து

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் லியனார்டோ டிகாப்ரியோ நடித்து ஆடம் மெக்கே இயக்கிய திரைப்படம் ‘டோன்ட் லுக் அப்’. இப்படத்தில் ஜெனிபர் லாரன்ஸ், ராப் மொர்கன், ஜொனா ஹில் போன்ற பலர் நடித்துள்ளார். டிசம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இப்படம் குறித்து அவருடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள் அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார் உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது அழகான ஆங்கிலப் படம் Don’t Look Up (மேலே பார்க்காதே) நீங்கள் மேலே பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியான 94- வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் டோன்ட் லுக் அப் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools