ஆசியா பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி காலியிறுதிக்கு முன்னேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில்
தொடர்ந்து முன்னேறி வருகிறார். நேற்று நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21-16, 21-16 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு
முன்னேறினார்.

போட்டி தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள சிந்து, காலிறுதி ஆட்டத்தில் மூன்றாம் தரநிலையில் உள்ள சீன வீராங்கனை பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியும் காலிறுதியை உறுதி செய்தது. சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வி அடைந்து
வெளியேறினர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools