ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது.

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா, தென் கொரியா, சீனா, மலேசியா என்று மொத்தம் 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.

இதில், அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது. இறுதி போட்டியில், பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்.

இதையடுத்து நடந்த 2 ஆவது ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் 11-21 14-21 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தார். தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர். இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன.

கடைசியாக வெற்றியை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.
இதன் மூலமாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools