ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை சேர்க்காதது தவறான முடிவு – முன்னாள் வீரர்கள் கண்டனம்

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ‘சூப்பர் 4’ சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடைசி கட்டத்தில் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான கிரண் மோரே கூறியதாவது:-

தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும் அவரை அவரது பங்களிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.

இதேபோல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் தினேஷ் கார்த்திக்குக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools