ஆண்களுக்கு நிகராக பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம்பளம் – பிசிசிஐயின் முடிவுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools