ஆர்யாவின் ‘டெடி’ ஒடிடி-யில் ரிலீஸாகிறது?

கொரோனாவால் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடி இருந்ததால் புதிய படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்பட்டன. சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம், அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன் நடித்த அந்தகாரம், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப், யோகிபாபுவின் காக்டெயில் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படத்தில் சாயிஷா, சாக்‌ஷி அகர்வால், கருணாகரன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு பொம்மையும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார்.sarp

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools