ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சேப்பாக்கம் ஸ்டேடியம்

உலக கோப்பை தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன் சென்னையில் ஆஸ்திரேலியா மூன்று முறை உலக கோப்பை போட்டியில் விளையாடியுள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்து, முதல் முறையாக சென்னை மண்ணில் தோல்வியை தழுவியுள்ளது.

மேலும் ஐசிசி உலக கோப்பையில், ஆஸ்திரேலியா தொடக்க போட்டியில் கடந்த 2003-ல் இருந்து தோல்வியை சந்திக்காமல் வந்தது. நேற்று தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பையில் 19 முறை இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளது. இது அந்த அணியின் 4-வது தோல்வி இதுவாகும்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil sports