ஆஸ்திரேலியாவில் ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியெரிந்த நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools