ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி – இந்திய அணியில் இடம் பிடித்த ஷ்ரேயஸ் அய்யர்

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools