ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – இந்தியா தோல்வி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விராட் கோலி சதம் அடித்த 56 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதேபோல், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும், முகமது சிராஜ் ஒரு ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர். பிரசித் கிருஷ்ணா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி விதித்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. இருப்பினும், இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports