X

ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்- 622 ரன்களுக்கு டிக்ளர்

ஆஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி டிக்ளர் அறிவித்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வீசிய கடினமான டெலிவெரிகளை மிகவும் ரசித்து பந்தாடிய புஜாரா, 193 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்பு வந்த ரஹானே மற்றும் விஹாரி, 18 மற்றும் 42 முறையே அடித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதற்கு அடுத்ததாக வந்த பாண்ட் மற்றும் ஜடேஜா கூட்டணி, ஆஸ்திரேலியன் பௌலர்களை மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாகியது.

பாண்ட் 159 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த போது, ஜடேஜா 81 ரன்களுக்கு தனது விக்கெட்டினை ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் லியோனிற்கு பறிகொடுத்தார்.

அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொண்ட இந்திய அணி, 622 ரன்களுக்கு டிக்ளர் அறிவித்தது. பின்பு விளையாட்டை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, இறுதியில் 24 ரன்களுக்கு, விக்கெட்டுக்களை இழக்காமல், இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்து வைத்தது.

இன்னும், 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காவது டெஸ்டிலும் வெற்றியடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.