ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டி – இந்திய வீரர் பிரனாய் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports