ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்த டேவிட் வார்னர், பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்சி ஓராண்டு தடைபெற்றுள்ளார். இதனால் டி20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார்.

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது கேட்ச் பிடிக்கும்போது அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சொந்த நாடு திரும்பினார்.

இந்நிலையில் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். லேசான காயம் என்பதால் 21 நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது.

அதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். மற்றொரு வீரரான ஸ்மித்தும் முழங்கை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools