X

ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம் வழக்கும் கோவில்! – ஐதராபாத்தில் ஆச்சரியம்

நாட்டில் பல்வேறு மக்களையும் பெரும்பாலும் தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. இதற்கு மீன் சிறந்த உணவாகும். ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாகதான் உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் சுவாச பிரச்சனைகளோடு வரும் பக்தர்களுக்கு மீன்களை பிரசாதமாக வழங்குகிறது. இந்த நடைமுறை 174 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

தங்கள் குடும்பத்தினர் மட்டுமே அறிந்த இந்த ரகசியத்தை, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுடன் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் மீன் பிரசாதமாக வழங்கப்படுகிறது என அக்கோவிலின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதற்காக எவ்வித பணமும் பெறுவதில்லை எனவும், இந்த மீன் சிகிச்சை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது எனவும் அக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த மீன் பிரசாத மருத்துவ முகாம் 45 நாட்களுக்கு நடைபெறுகிறது.

மேலும் எவ்வித மத பேதமும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த முகாமில் கலந்துக் கொள்கின்றனர் எனவும், இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மீன் சிகிச்சைப்பெற்று பயன்பெற உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: south news