இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 5-ம் தேதி முதல் மார்ச் 28-ம்ம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்:-

விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, சுக்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியா, ரிஷிப் பண்ட், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் (உடல்தகுதியை பொறுத்து).

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டி நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools