இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி – பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் டக்அவுட்டானார். பிலிப் சால்ட் 30 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பென் டுக்கெட் 43 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹேரி பூருக் 31 ரன்னும், சாம் கரண் 10 ரன்னும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 55 ரன் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடி கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 88 ரன் அடித்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools