இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பரிமிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்மித்தின் (144) அபார சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து பேர்ன்ஸ் (133) சதத்தால் 374 ரன்கள் குவித்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஸ்மித் (142), மேத்யூ வடே (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 487 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (6), பேட் கம்மின்ஸ் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news