X

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முதல் நாள் முடிவில் 9/277 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்திலேயே டீன் எல்கர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 111 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது இறங்கிய டி காக் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடி அரை சதமடித்தார்,

சதமடிப்பார் என எண்ணிய நிலையில் 95 ரன்னில் டி காக் அவுட்டானார். சுபைர் ஹம்சா 39 ரன்னும், டுவைன் பெரெடோரியஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 82.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. பிளெண்டர் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் சாம் கரன் 4 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: sports news