இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் பென் ஸ்டோக்

ஆஷஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து, சமீபத்தில் ஜோ ரூட் பதவி விலகினார். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புதிய டெஸ்ட்
கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 31 வயதான ரூட், அலாஸ்டர் குக்கிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் இரண்டாவது அதிக டெஸ்ட் ரன் அடித்தவர்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் கேப்டன் பதவியை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்
போர்டின் இயக்குனரான ரோப் கீ-யை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணியில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை மீண்டும் அணியின் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் அணிக்கான புதிய தலைமைப்பயிற்சியாளரை நியமிப்பதிலும் ரோப் கீ ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பொறுப்புகளை தனித்தனியாகப்
பிரித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் சைமன் கட்டிச் ஆகியோரை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools