இணையத்தை கலக்கும் சிம்பு பட பாடல்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14-ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அறிவித்தபடி இப்படத்தில் இடம்பெற்றுள்ள மறக்குமா நெஞ்சம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் குரலில் தாமரை வரிகளில் உருவாகி உள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools