X

இதற்கு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் – கவுதம் காம்பீர் கோரிக்கை

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர்.

தற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘எச்சில் பயன்படுத்த தடைவிதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர இருக்கிறது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நீங்கள் ‘எச்சில்’ பயன்படுத்த அனுதிக்கவில்லை என்றால், மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானதாக இருக்கும், இல்லையெனில் கிரிக்கெட்டைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்காது’’ என்றார்.

Tags: sports news