இது என் கடைசி ஐபிஎல் போட்டி அல்ல – டோனியின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி. இவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து டோனி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், லக்னோவில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாசின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல்…மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? என டோனியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த டோனி, இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்… ஆனால், நான் முடிவு செய்யவில்லை என தெரிவித்தார். உடனடியாக டேனி மோரிசன் டோனியைப் பார்த்து, நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பீர்கள் எனக்கு தெரியும் என்றார்.

அதன்பின் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், டோனி மீண்டும் வருவார்.. டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார் என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools