இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் நமது மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் உயர்ந்து நிற்கிறது. தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலிலும் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களை தொடுவார்கள்.

இவ்வாறு அதில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools