இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றி அசத்தியது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்டில் ஒய்வு அளிக்கப்பட்ட கேப்டன்  விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவார் என்பதால் இந்திய அணி  பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும். விராட் கோலி அணிக்கு திரும்பி இருப்பதால் இந்திய அணியில் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது .

மொத்தத்தில் இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த  போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools