இந்தியா, நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் யார்? – வாசிம் ஜாபர் போட்ட புதிர்

இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 15 பேர் கொண்ட அணிகளை இரு நாடுகளும் அறிவித்துவிட்டன. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்? யார்? என்பது டாஸ் சுண்டப்பட்ட பிறகே தெரியும்.

அதற்கு முன் இந்திய அணியில் இவர்களெல்லாம் இடம் பெறலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் அடித்தவருமான வாசிம் ஜாபர் ரசிகர்களுக்கு புதிர் போடுவது வழக்கம்.

இந்திய வீரரர்கள் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும் ஐபிஎல் அணியை வைத்து 11 பேர் கொண்ட இந்திய அணியை வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார்.

வாசிம் ஜாபர் டுவிட்டர் பக்கத்தில்,

1. மும்பை இந்தியன்ஸ், 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3. சென்னை சூப்பர் கிங்ஸ், 4. ஆர்சிபி, 5. டெல்லி கேப்பிட்டல்ஸ், 6 டெல்லி கேப்பிட்டல்ஸ், 7. சென்னை சூப்பர் கிங்ஸ், 8. டெல்லி கேப்பிட்டல்ஸ், 9. டெல்லி கேப்பிட்டல்ஸ், 10. பஞ்சாப் கிங்ஸ், 11. மும்பை இந்தியன்ஸ்.

எனத் தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளவர்கள் ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பதை ரசிகர்கள் சரியாக கண்டுபிடித்தால் 11 பேர் கொண்ட பட்டியல் வரும்.

வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் 1. ரோகித் சர்மா, 2. ஷுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஷ்வின், 9. இஷாந்த் சர்மா, 10, முகமது ஷமி, 11. பும்ரா.

இவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools