இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வருத்தம்

கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.  இதனால் இந்த தொடரை, தென் ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம்  இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:

முக்கிய நேரங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. அவர் (கே.எல்.ராகுல்)  இப்போதுதான் தொடங்குகிறார், அவர் மிகவும் கண்ணியமாக செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். கேப்டனாக தொடர்ந்து சிறப்பாக வருவார்.  நாங்கள் அதிக ஒருநாள் கிரிக்கெட் விளையாடவில்லை. நாங்கள் கடைசியாக மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினோம்.

இந்தத் தொடர் நல்ல அனுபவமாக அமைந்தது. 2023 உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. அதற்கு முன்பு நாங்கள் நிறைய ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவோம். இந்தியா எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தேவையான சமநிலையில் இந்திய ஒருநாள் அணி இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools