இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்பும் கேரி கிர்ஸ்டன்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ் ஷா, மாஸ்கரனாஸ், ரமேஷ் பவார் உள்ளிட்டோர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும் பயிற்சியாளர் போட்டியில் இணைந்துள்ளார். அவரும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 51 வயதான கிர்ஸ்டன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்ததோடு 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி விண்ணப்பித்தவர்களிடம் வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools