இந்திய ஹாக்கி வீரரை வீடு தேடி சென்று பாராட்டிய நடிகர் மம்மூட்டி

சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். இவருக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. கேரளாவைச் சேர்ந்த அவருக்கு கேரள மாநில அரசு இரண்டு கோடிகள் பரிசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் மம்முட்டி, கேரளாவில் உள்ள ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு திடீர் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஸ்ரீஜேஷை பாராட்டி பூங்கொத்து கொடுத்து இருக்கிறார்.

அதன்பின் ஸ்ரீஜேஷ் மம்முட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools