இன்று அட்சய திருதியை – தங்கம் வாங்க நல்ல நாள்

அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை  உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools