இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது – தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 1.42 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஆண்டும் நீட் தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools