இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, பெரியார், கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்தார்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news