இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா

2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். இவர் கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ”தலைவி” என்ற படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் அடுத்ததாக கதாநாயகியை மையப்படுத்திய கதையை உருவாக்க இருக்கிறார். இதில் வேட்டைக்காரன், சிங்கம், வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools