X

இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா ராணுவத்தில் இணைந்தார்!

இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் திசாரா பெரேரா. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், பேட்டிங்கில் கவனம் செலுத்தி ஆல்-ரவுண்டராக முன்னேறினார்.

தற்போது அவர் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுவது புதிது அல்ல. ஏற்கனவே ஹெட்லெ வெரிட்டி, சர் டான் பிராட்மேன், கபில்தேவ், எம்எஸ் டோனி அகியோர் ராணுவத்தில் பணியாற்றிருக்கிறார்கள்.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெரிட்டி இரண்டாம் உலகப்போரின் போது தனது உயிரை தியாகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திசாரா பெரேரா இலங்கை அணிக்காக 6 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 79 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Tags: sports news