இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பாலாஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் – ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி எல்லையை கடந்து சென்ற பாலஸ்தீனியர்களில் 14 பேர் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல் கத்ரா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் இன்று நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என இடம் பெயர்ந்த மக்கள் 14 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவின் கடற்கரை பகுதியை ஒட்டிய சாலையில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது. முன்னதாக இங்கு இருப்பவர்களை தெற்கு நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news