இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையிலான ஆலோசனை நிறைவு பெற்றது

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும், அ.தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பாகவும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்தனர்.

இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அதிகாலையில் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், .பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools