உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு

2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது.

குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார்.

இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools