உக்ரைன் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா – அமெரிக்கா கண்டனம்

கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது.

இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரஷியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷியாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது. எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷியாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம்.

போர்க்குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷியாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம்.

இவ்வாறு பைடன் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools