உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? – கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயிடம் கேள்விகளை எழுப்பிய நடிகர் அரவிந்த்சாமி

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளது குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

நான் ரஜினி, கமல் சாரின் பெரிய ரசிகன், விஜயை ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஓட்டு போடக்கூடாது. நான் ஓட்டு போடமாட்டேன். மற்றவர்கள் எப்படி பண்றாங்க என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுற விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?. உங்களால் அது முடியுமா? உங்களின் நல்ல எண்ணங்கள், நோக்கம் அது எனக்கு முதலில் ரீச்-ஆக வேண்டும். நீங்கள் ஒரு பெரிய ஆக்டர். நீங்கள் நல்ல கவர்ன்மென்ட் பாலிசியை எல்லாம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று நான் எப்படி நம்புவது. உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்கலாம். நல்ல எண்ணங்கள் இருக்கலாம்.

இவ்வளவு நாள் நல்ல ஹீரோவாக இருந்திருக்கிறேன். சினிமாவில் எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் திரும்பவும் மக்களை காப்பாற்ற போகிறேன் என்று ஒரு ‘ஸ்டாருக்கு’ வருகிற ‘மைண்ட் செட்’ உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால் நீங்கள் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு, ஒரு பாலிசியை உருவாக்குவதற்கு என்ன படிச்சு இருக்கீங்க. நீங்க பண்ண முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பண்ண முடியும். மக்களுக்கு நல்லது செய்ய, புதிய திட்டங்கள் உருவாக்க ஒரு தலைமைத்துவ பண்பு எங்கே இருக்கிறது.

இவ்வாறு அரவிந்த் சாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema