X

உத்தரப்பிரதே மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அனுமதி மறுப்பு – பா.ஜ.க மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரசே மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற பல விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விண்ணப் படிவத்துடன் முறையான ஆவணங்களை இணைக்கவில்லை என்று கூறி நொய்டாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத பல விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாவது:

பாஜக அரசின் ஊழலால், ஒருமுறை தேர்வுத்தாள் கசிந்ததால், தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு எழுத மறுக்கப்பட்டனர். இது முழுக்க முழுக்க அநீதி. அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத முடியும் என்பதை அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்காவின் குற்றச்சாட்டிற்கு நொய்டா காவல்துறை கூடுதல் ஆணையர் ரன்விஜய்சிங் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது :

சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள அதிகாரிகளின் கருத்துப்படி, மதிப்பெண் சான்றிதழில் முதன்மை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி கையொப்பமிட வேண்டும், ஆனால் அவர்கள் அதை எங்கிருந்தோ பெற்றனர். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டது.  மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.