உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் நிதி உதவி

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர்.

அவர்களது உடல் நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools