உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், காலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் முதல் ஓவரிலேயே இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடியது. டெய்லர் அரை சதமடித்து அசத்தினார்.

160 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், டெய்லரை கெயில் அவுட்டாக்கினார். டெய்லர் 69 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் அவரை வெளியேற்றினார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் ஹோப் களம் இறங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்த நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ஷாய் ஹோப் 1 (3) ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கயி நிகோலஸ் பூரன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஹெட்மயர் களம் இறங்க, கிறிஸ் கெய்ல் இவருடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை குவிக்க தொடங்கினர். கிறிஸ் கெல் மற்றும் ஹெட்மயர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை கடந்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 22.1 வது ஓவரில் ஹெட்மயர் 54 (45) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 23.6 வது ஓவரில் அதிரடி வீரர் கிறிஸ் கெல் 84 பந்துகளை சந்தித்து 87 ரன்கள் எடுத்திருந்த போது கிரான்ட்ஹோம் வீசிய பந்தில் அவுட்டானார். அஸ்லே நர்ஸ் 1(8) ரன்னும், இவின் லீவீஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பிரித்வெய்ட்டுடன், கேமர் ரோச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஒரளவு ரன் சேர்த்திருந்தநிலையில் கேமர் ரோச் 14(31) ரன்களில் வெளியேறினார். அணிக்கான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித் வெய்ட் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஷெல்டன் கட்ரல் 15(25) ரன்களில் கேட்ச் ஆனார். தனி ஒருவனாக போராடிய பிரித்வெய்ட் தனது சதத்தை பதிவு செய்த நிலையில் 101(82) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், நீஷம், ஹென்றி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news