உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதுகிறது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil sports