உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய ஆடும் லெவன் அணியை தேர்வு செய்த கவாஸ்கர்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்குகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வீரர்கள் யாராக இருப்பார் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட சாதமாக இருக்காது. வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணி ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், கவாஸ்கர் தன்னுடைய ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார். அந்த அணி வருமாறு:-

1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. கே.எஸ். பரத், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. முகமது சமி, 10. முகமது சிராஜ், 11. ஷர்துல் தாகூர்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது:-

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்கள், புஜரா 3-வது, விராட் கோலி 4-வது. ரகானே ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவார். 6-வது இடத்திற்கு விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தா? அல்லது இஷான் கிஷனா? என யோசித்து பார்த்தேன். எல்லோரும் பரத்தை பற்றி பேசுகிறார்கள். ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆகவே, 6-வது இடத்திற்கு அவர் சரி எனத் தோன்றுகிறது.

சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவருக்குமே இடம் கொடுத்துள்ளார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools