எங்களோட காதல் ஓசை இப்போ உங்களுக்கும் கேட்கும் – வைரலாகும் நடிகை ஆலியாபட்டின் பதிவு

‘ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்திருக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பில் இடம்பெற்றுள்ள தீத்திரியாய் மூலமா என்ற பாடலை ஆலியா பட் பகிந்துள்ளார். இது குறித்து தமிழில் பதிவிட்டுள்ள ஆலியா பட், எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும் தீத்திரியாய் மூலமா! என்று பதிவிட்டுள்ளார். மதன் கார்க்கி வரிகளில் சித்ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools