எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி – நடிகர் விக்ரம்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது; எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும், என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools