என்னுடைய 400 ரன்கள் சாதனையை 2 இந்திய வீரர்கள் முறியடிப்பார்கள் – பிரைன் லாரா

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் என்னுடைய இந்த சாதனையை யார் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சோபர்ஸ் (365) அடித்த சாதனையை 1970 மற்றும் 80-களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும் தான் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்.

என்று பிரையன் லாரா கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools