ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் பயஸ் தோல்வி

பிரான்ஸ் நாட்டின் லில்லி நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பயஸ், ஆஸ்திரிய வீரர் பிலிப் ஓஸ்வால்டுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். இரண்டாம் தரநிலையில் உள்ள பயஸ்-பிலிப் ஜோடி முதல் சுற்றில் ஸ்பெயின் ஜோடி கில்லரோ- டேவிட் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி, அந்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுத்த ஸ்பெயின் ஜோடி அடுத்தடுத்து இரண்டு செட்களை (6-3, 10-4) கைப்பற்றி வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news