ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு இளையராஜா பதில்

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வந்தது. இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா பதிவிட்டிருக்கிறார். அதில், ”கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools