ஐபிஎல்கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர். மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இது ஒரு நல்ல பயணம். இன்று (மே 28)  இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 28.29 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.29 ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools